முதல்வர் விஜய் பதிவு:
ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம்.மாவீரன் பூலித் தேவனின் படைத்தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை ஒற்றை வீரராக எதிர்த்து நின்று, நிலைகுலையச் செய்ததோடு, தன் ஒரு கரத்தையே இழந்தபோதிலும் பல போர்களைப் புரிந்து தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது இன்னுயிரை தியாகம் செய்தவர் ஒண்டிவீரன்.
அவரது வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றிடுவோம். வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்.
இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
ஒண்டி வீரன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.திமுக தலைவர், ஸ்டாலின்18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே ஆங்கிலேயப் படைகளுக்கு அடிபணிய மறுத்து, அவர்களை அடித்து விரட்டிய ஒப்பிலா வீரத்துக்குச் சொந்தக்காரரான ஒண்டிவீரனின் நினைவுநாள். பூலித்தேவரின் சிறந்த போர்ப்படைத் தளபதியாகவும் தென்னகத்தின் விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்திய தென்மலைப் போர் நாயகனாகவும் திகழ்ந்த அப்பெருந்தீரரின் புகழ் அழியாது மக்கள் மனங்களில் வாழும்.துணை ஜனாதிபதி, சிபிஆர்விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால வீரர்களில் ஒருவரும், மாவீரர் பூலித்தேவரின் ஆற்றல்மிகு படைத்தளபதியுமான ஒண்டிவீரனின் நினைவு நாளில், அவரது புகழையும் வீரத்தையும் போற்றி அஞ்சலி செலுத்துகிறேன்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாது போராடிய அவரது வீரமும் தியாகமும், போர்த்திறனும், விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் அழியாத தடம் பதித்துள்ளன.
அவரது வீர உணர்வும் தியாக வாழ்வும் இளைய தலைமுறையினருக்கு என்றும் உத்வேகம் அளிக்கட்டும்.
