ஒலிம்பிக் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பில் சீன ஊடகக் குழுமத்தின் தொழில்நுட்பப் புத்தாக்கம் பற்றிய அறிக்கை பாரிஸில் வெளியீடு

ஒலிம்பிக் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பில் சீன ஊடகக் குழுமத்தின் தொழில்நுட்பப் புத்தாக்கம் பற்றிய அறிக்கை பாரிஸில் வெளியீடு

ஒலிம்பிக் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பில் சீன ஊடகக் குழுமத்தின் தொழில்நுட்ப புத்தாக்கம் பற்றிய அறிக்கை ஜூலை 25ஆம் நாள் சீன மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு மொழி உள்ளிட்ட பன்னாட்டு மொழிகளில் பாரிஸ் நகரில் வெளியானது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹைசியொங், ஒலிம்பிக் ஒளிபரப்புச் சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யியானிஸ் எக்சாக்ஸ் ஆகியோர் பாரிஸிலுள்ள ஒலிம்பிக் சர்வதேச ஒளிபரப்பு மையத்தின் சீன ஊடகக் குழுமத்தின் பதிவறையில் இவ்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்வில் கூட்டாகக் கலந்து கொண்டனர்.


அப்போது பேசிய ஷென் ஹைசியொங், சீன ஊடகக் குழுமம் அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத்தை இடைவிடாமல் முன்னேற்றி வரும் கட்டத்தின் சாதனையாக இவ்வறிக்கை திகழ்கிறது எனப் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், ஒலிம்பிக் ஒளிபரப்பு சேவை நிறுவனத்துடன் நீண்டகால நட்பு ஒத்துழைப்பை நிலைப்படுத்திச் சொந்தமாக ஆராய்ந்து உருவாக்கப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்களும் உபகரணங்களும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளின் சிறந்த ஒளிபரப்புக்கு வலிமையான அடித்தளத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author