கேரளாவில் 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், அந்த சிறுவனுக்கு இன்று காலை 10.50 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு சிகிச்சை பலனில்லாமல் அவன் உயிரிழந்தான்.
“அவன் வென்டிலேட்டர் ஆதரவில் இருந்தான். இன்று காலை அவனுக்கு சிறுநீர் வெளியேறுவது குறைந்துவிட்டது. அதன் பிறகு, அவனுக்கு ஒரு பெரிய மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவனை காப்பாற்ற முடியவில்லை. அவன் இன்று காலை 11.30 மணியளவில் காலமானான்” என்று அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறினார்.