சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஆகஸ்ட் 26ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் பெர்டூவுடன் சந்திப்பு நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், இரு நாட்டு அரசுத்தலைவர்களின் வழிகாட்டலின் கீழ், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆக்கப்பூர்வமானதும் நெடுநோக்கும் கொண்ட நிலையான உறவை இரு தரப்பும் ஊக்குவித்து வருகின்றன என்றும், இரு தரப்பும் இரு நாட்டு அரசுத்தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்தக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தவும், நேர்மறையான செயல்திட்டங்களில் கவனம் செலுத்தவும், கருத்து வேறுபாடுகளை உரிய முறையில் சமாளிக்கவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
டேவிட் பெர்டூ கூறுகையில், இரு நாட்டு அரசுத்தலைவர்களும் அமெரிக்க-சீன உறவுக்கு முக்கிய நெடுநோக்கு ரீதியான வழிகாட்டலை வழங்கியுள்ளனர் என்றும், இரு தரப்பும் பரிமாற்றத்தை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், அடுத்த கட்ட முக்கிய உயர் மட்ட தொடர்புகளுக்குத் தயார் செய்யவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
