ஆப்பிரிக்க மக்களுக்கு நன்மை தரும் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு
ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு சீனாவின் வளர்ச்சி துணை புரிவதன் மூலம், இரு தரப்புகளுக்கும் பரஸ்பர நலன் மற்றும் வெற்றி-வெற்றி என்ற நிலையை அடைவதே சீன-ஆப்பிரிக்க உறவின் பெரிய முக்கியத்துவமாகும். 2015ஆம் ஆண்டு, ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதை வலியுறுத்தியிருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக, 70க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 1500க்கும் மேலான வேளாண் தொழில் நுட்பங்களைப் பரவல் செய்து, கிராமப்புறங்களில் வறுமை குறைப்பை நனவாக்குவதற்கு சீனா பாடுபட்டு வருகிறது.
2013ஆம் ஆண்டு முதல், ஆப்பிரிக்காவில், 6000 கி.மீ. இருப்புப்பாதைகள், 6000 கி.மீ. நெடுஞ்சாலைகள், 80க்கும் அதிகமான பெரிய ரக மின்னாற்றல் வசதிகள் மற்றும் சுமார் 20 துறைமுகங்கள் ஆகியவற்றின் கட்டுமானத்தில் சீனா பங்கேற்றதுடன், பல முன்னேற்றங்களையும் பெற்றுள்ளது.
மேலும், 2022ஆம் ஆண்டு, ஆப்பிரிக்காவில் மின்னணு வர்த்தகத்தின் வருவாய் சுமார் 3250 கோடி அமெரிக்க டாலரை எட்டியதோடு, 2027ஆம் ஆண்டு, இந்த தொகை 6000 கோடி டாலருக்கு உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையில், சீனாவின் மின்னணு வணிக தொழில்நுட்பம், ஆப்பிரிக்க நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், சீனாவுக்கான ஆப்பிரிக்க தயாரிப்புகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதிலும், ஆப்பிரிக்க மக்களை வறுமையில் இருந்து விடுவிப்பதிலும் ஆக்கப்பூர்வமாகப் பங்கு ஆற்றுவது குறிப்பிடத்தக்கது.