சீன-இந்தோனேசிய பன்முக நெடுநோக்கு பேச்சுவார்த்தை அமைப்புமுறைக்கான முதலாவது கூட்டம்

Estimated read time 1 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோ ஆகியோர், ஆகஸ்ட் 21ஆம் நாள் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற சீன-இந்தோனேசிய பன்முக நெடுநோக்கு பேச்சுவார்த்தை அமைப்புமுறைக்கான முதலாவது கூட்டத்துக்குக் கூட்டாகத் தலைமைத் தாங்கினர். சீன-இந்தோனேசிய பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது குறித்து, இரு தரப்பினரும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டு, விரிவான முறையில் ஒத்தக் கருத்துக்களை எட்டியுள்ளனர்.

அப்போது வாங்யீ கூறுகையில், பன்முக நெடுநோக்கு பேச்சுவார்த்தை அமைப்புமுறையின் உருவாக்கம் என்பது, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்தக் கருத்துக்களைச் செயல்படுத்தி, பிரதேச மற்றும் உலகளாவிய செல்வாக்கு கொண்ட சீன-இந்தோனேசிய பொது எதிர்காலச் சமூக கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கான முக்கிய நடவடிக்கையாகும். இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்குவதற்கு இது முக்கிய ஆதரவளிக்கும் என்றார்.

You May Also Like

More From Author