சீன-சுவிட்சர்லாந்து தாராள வர்த்தக உடன்படிக்கையை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நிறைவு

Estimated read time 1 min read

சுவிட்சர்லாந்து கூட்டாட்சித் தலைவரும், பொருளாதாரம் மற்றும் கல்வி ஆராய்ச்சி அமைச்சருமான கைய் பார்மெலின் 20ஆம் நாள், அந்நாட்டின் தலைநகரில், சீன வணிகத் துறை அமைச்சர் வாங் வென் டாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் போது சீன-சுவிட்சர்லாந்து தாராள வர்த்தக உடன்படிக்கையை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நிறைவடைந்து, புரிந்துணர்வு குறிப்பாணையில் கையொப்பமிட்டுள்ளதாக இரு தரப்பினரும் கூட்டாக அறிவித்தனர்.

வாங் வென் டாவ் கூறுகையில், இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், 5 சுற்று கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு, இப்பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்றார். மேலும், இந்த ஒத்துழைப்பானது சரக்கு, சேவை, முதலீடு, விதி உள்ளிட்ட துறைகளில் மேலும் உயர் நிலைத் திறப்பு அளவை விரிவாக்கி, இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளுக்கு புதிய வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்டு வரும் என்றும் அவர் கூறினார்.

You May Also Like

More From Author