அக்டோபர் 7ஆம் தேதி இந்தியா வருகிறார் மாலத்தீவு அதிபர்  

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இருதரப்பு பயணமாக அக்டோபர் 7ஆம் தேதி இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஏஎன்ஐ வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜூன் 9ஆம் தேதி டெல்லிக்கு வந்த முகமது முய்சுவின் இரண்டாவது இந்திய பயணமாக இது இருக்கும்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 10 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களுக்காக ஜனவரி மாதம் இடைநீக்கம் செய்யப்பட்ட மாலத்தீவின் இரண்டு ஜூனியர் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து ராஜினாமா செய்த ஒரு நாளில், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது.

இரு நாட்டு தலைவர்களுக்கும் ஏற்ற வகையில் தேதி முடிவு செய்யப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

More From Author