சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஜனவரி 28ஆம் நாள், பிரான்ஸ் அரசுத் தலைவரின் வெளி விவகார ஆலோசகர் போனாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
அப்போது வாங் யீ கூறுகையில்,
சீனாவும் ஐரோப்பாவும் கூட்டாளியாக இருக்கிறோம். எதிரி அல்ல. உலக பல்துருவமயமாக்கத்தை முன்னேற்றுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து சீனாவும் ஐரோப்பாவும் ஒரே கருத்து கொண்டுள்ளன. பேச்சுவார்த்தையின் மூலம் வர்த்தக சர்ச்சையைத் தீர்க்கும் திறன் இருதரப்புக்கும் உண்டு. தற்போதைய நிலைமையைப் பொருத்தவரை, சீனாவும் ஐரோப்பாவும் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை வலுப்படுத்தி ஒத்துழைப்புகளை ஆழமாக்க வேண்டும். அண்மையில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலர், சீனாவில் பயணம் மேற்கொண்டனர். இது இருதரப்புறவை முன்னேற்றியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ் தொடர்து முக்கிய பங்கு ஆற்றி, சீன-ஐரோப்ப உறவின் வளர்ச்சியை முன்னெடுக்க சீனா விரும்புவதாக என்றார்.
