சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 20ஆம் நாள் தென் கொரியாவின் சியோல் நகரில் அந்நாட்டின் அரசு தலைவர் லீ ஜே-மியுங்கைச் சந்தித்தார்.
தற்போதைய தென் கொரிய-சீன உறவின் விரைவான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியை தெரிவித்த லீ ஜே-மியுங், இருநாடுகளும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும், ஒன்றுக்கொன்று நன்மை புரியும் கூட்டாளிகளாக மாற வேண்டும் என்று கூறினார்.
வாங் யீ கூறுகையில், சீனாவுடன் சேர்ந்து நடப்பது என்பது வாய்ப்புகளுடன் சேர்ந்து நடப்பதாகும் என்றார். மேலும், சீனாவுடனான நட்பார்ந்த கொள்கையை உறுதியாகப் பின்பற்றவும், சீன-தென் கொரிய உத்திநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவை முன்னெடுக்கவும், இருநாட்டு வளர்ச்சிக்கும் பிரதேச அமைதி மற்றும் செழிப்புக்குப் பங்களிக்கவும் தென் கொரியா பணியாற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
