புதிய யுகத்தில் சீனாவின் திறப்பு கொள்கைக்கு நுழைவாயிலாக ஹைனான் தாராள வர்த்தக துறைமுகத்தைக் கட்டமைக்கவும், சீன நவீனமயமாக்கத்தில் ஹைனான் தனது வரலாற்றைச் சுயமாகவே எழுதவும் வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 17ஆம் நாள் வலியுறுத்தினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், ஹைனான் மாகாணத்தின் பணியறிக்கையைக் கேட்டறிந்த பின்னர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் ஹைனான் பெற்றுள்ள சாதனைகளைப் பாராட்டிய அவர், இம்மாகாண எதிர்காலத்துக்கான தெளிவான தேவைகளையும் முன்வைத்தார்.
ஹைனான், தனது தனித்துவம் மற்றும் சாதகமான அம்சங்களைப் பயன்படுத்தி ஒரு நவீன தொழில்துறை அமைப்பைக் கட்டமைக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் தொழில்துறை புத்தாக்கத்தை ஆழமாக ஒருங்கிணைப்பதை ஹைனான் முன்னேற்றுவதுடன், தொலைநோக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாட்டின் ஆற்றலுடன் சேர்ந்து சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், சூழலியில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தல், பசுமை வளர்ச்சியைக் கடைப்பிடித்தல், கலாசாரம்-விளையாட்டு-சுற்றுலா-மருத்துவம் ஆகிய தொழில்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை முன்னேற்றுதல், சுற்றுலாத் துறையில் திறப்பு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காக ஹைனான் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.