சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் வழங்கிய அறிக்கையின் ஒரு பகுதியாக புதிய யுகம் மற்றும் புதிய போராட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை என்ற தலைப்பிலான கட்டுரையை ட்சியு ட்ஷி எனும் இதழ் ஜுலை முதல் நாள் வெளியிடவுள்ளது.
சீனாவின் பல்வேறு தேசிய இன மக்களுக்கு தலைமை தாங்கி, சோஷலிச நவீனமயமாக்க வல்லரசை பன்முகங்களிலும் கட்டிமுடித்து, 2ஆவது நூற்றாண்டு போராட்ட இலக்கை நனவாக்கி, சீன நவீனமயமாக்கம் மூலம் சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை முன்னேற்றுவது தற்போது முதல் சீன்க் கம்யூனிஸ்ட் கட்சியின் மைய கடமையாகும் என்று இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டது.
சோஷலிச நவீனமயமாக்க வல்லரசை பன்முகங்களிலும் கட்டியமைப்பதற்கு இரு காலக் கட்டங்களாக பாடுபட வேண்டும். அதாவது, 2020 முதல் 2035ஆம் ஆண்டு வரை சோஷலிச நவீனமயமாக்கத்தை அடிப்படையில் நனவாக்க வேண்டும். 2035 முதல் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சீனாவை செல்வம், ஜனநாயகம், நாகரிகம், இணக்கம், அழகு ஆகியவை கொண்ட சோஷலிச நவீனமயமாக்க வல்லரசாக கட்டியமைக்க வேண்டும். சோஷலிச நவீனமயமாக்க நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பது, மாபெரும் கடினமான இலட்சியமாகும். ஒளிவீசும் எதிர்காலத்தைக் கொண்ட இந்த இதை நனவாக்க நீண்டகால முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.