எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Estimated read time 0 min read

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் வரும் திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாட்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் இரு அவைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து 5ஆவது நாள் கூட்டத்தொடரிலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நீட் பிரச்னையை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டதால் வரும் திங்கட் கிழமை வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

You May Also Like

More From Author