தென்னாப்பிரிக்க அரசுத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மதமேலா சிரில் ரமபோசாவுக்குச் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜுன் 14ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும், தென்னாப்பிரிக்காவும் ஒன்றுக்கொன்று ஆழமாக அரசியல் நம்பிக்கை அளித்து, பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புச் சாதனைகளைப் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டின் ஆகஸ்டு திங்கள், தென்னாப்பிரிக்காவில் 4வது முறை பயணம் மேற்கொண்டு, அரசுத் தலைவர் ரமபோசாவுடன் முக்கிய ஒத்த கருத்துகளை எட்டியுள்ளேன். சீன-தென்னாப்பிரிக்க உறவின் வளர்ச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கிறேன்.
அரசுத் தலைவர் ரமபோசாவுடன் இணைந்து, இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளி உறவு புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைத்துள்ளதை முன்னேற்றி, உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழுமைக்குப் புதிய ஆற்றலை வழங்க விரும்புகிறேன் என்றார்.