அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 6வது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள சூழலில், இந்த மோதலில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 770ஐ கடந்துள்ளதாகப் பென்டகன் தெரிவித்துள்ளது.
தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியின் படி, பென்டகனின் அதிகாரப்பூர்வப் போரிழப்புத் தரவுத் தளத்தில் இதுவரை 18 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 756 வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவிற்கு இந்தப் போரினால் ஏற்பட்டுள்ள மனித ஆற்றல் இழப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஈரான் போரில் 770க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம் மற்றும் பலி; பென்டகன் அதிகாரப்பூர்வ தகவல்
