தென் சீனக் கடலில் திடீரென தோன்றிய 3 மர்ம கட்டமைப்புகள்…! போருக்கான அடுத்த நகர்வா என்ற கேள்வியை எழுப்பும் செயற்கைக்கோள் படங்கள்…! 

Estimated read time 0 min read

தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் புதிய கட்டுமானப் பணிகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. செயற்கைக்கோள் படங்களில் யாகோங் தீவில் மூன்று புதிய கட்டமைப்புகள் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இவை எதற்காக அமைக்கப்படுகின்றன என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், நிபுணர்கள் அவை ரேடார் அல்லது15 கண்காணிப்பு மையங்களாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

யாகோங் தீவு ஆன்டிலோப் ரீஃப் அருகே அமைந்துள்ளது. அப்பகுதியில் ஏற்கெனவே சீனா மிகப்பெரிய அளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய கட்டமைப்புகளின் பணிகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தொடங்கியிருக்கலாம் என்றும், ஆகஸ்ட் மாத செயற்கைக்கோள் படங்களில் அவற்றின் வளர்ச்சி தெளிவாகத் தெரிகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அமைப்புகள் ரேடார் நிலையங்களாக செயல்பட்டால், கடல் மற்றும் வான்வழி நடவடிக்கைகளை கண்காணிக்கும் திறனை சீனா மேலும் அதிகரிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், இவை நிச்சயமாக ராணுவ பயன்பாட்டுக்கானவை என்று இப்போதே முடிவு செய்ய முடியாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கிடையில், ஆன்டிலோப் ரீஃப் பகுதியில் சுமார் 6 கிலோமீட்டர் நீளமுள்ள செயற்கைத் தீவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் உருவாகியுள்ளதாகவும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

சீனா இத்திட்டங்கள் வானிலை கண்காணிப்பு, மீன்வளம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற பொதுப் பயன்பாடுகளுக்கானவை எனக் கூறினாலும், அதன் எதிர்கால ராணுவ பயன்பாடு குறித்து பிராந்திய நாடுகளிடையே கவலை நீடிக்கிறது.

You May Also Like

More From Author