வெளிநாட்டு முதலீட்டில் இயங்கும் நுகர்வு நிறுவனங்களின் 2026ஆம் ஆண்டின் 2ஆவது காலாண்டு அல்லது இவ்வாண்டின் முற்பாதி நிதிநிலை அறிக்கைகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில், சீனச் சந்தை இத்தகைய நிறுவனங்களின் வளர்ச்சிக்கான உந்து ஆற்றலாக திகழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேற்கூறிய நிறுவனங்களின் உயர் நிலை நிர்வாகிகள் சி.எம்.ஜி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது, கொள்கைச் சலுகை மற்றும் சந்தையின் உயிர் ஆற்றல் என்பதை பல முறை குறிப்பிட்டனர்.
இவ்வாண்டு முதல் தற்போது வரை, நுகர்வை விரிவாக்குவதற்குரிய 15ஆவது ஐந்தாண்டு திட்டம் உள்ளிட்ட நுகர்வு விரிவாக்கக் கொள்கைகள் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளன. இதனால், சீனச் சந்தையின் உயிர் ஆற்றல் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் உயர் நிலை தோல் பராமரிப்பு நிறுவனமானது பாபார் சீனாவில் முதலாவது முதன்மை அங்காடியை நிறுவியுள்ளது. இவ்வாண்டின் முதல் 7 திங்கள்காலத்தில், சீனச் சந்தையில் இந்நிறுவனத்தின் விற்பனைத் தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதுபற்றி இந்நிறுவனத்தின் சர்வதேச விற்பனைப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் ஹரிச்த் கரெண்ட் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது கூறுகையில்,
எமது நிறுவனத்தைப் பொருத்தவரை, சீனாவில் முதலீடு செய்து வருவது, எதிர்காலத்தில் உலகளவில் வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு வருவதற்கான முக்கிய முடிவாகும் என்றார். சீனச் சந்தையில் உயிர் ஆற்றல் மற்றும் போட்டி ஆற்றல் மிக அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீட்டில் இயங்கும் நுகர்வு நிறுவனங்கள், சீனச் சந்தையில் முதலீடு செய்து, பெற்றிருக்கும் வளர்ச்சி, சீனச் சந்தையின் உள்ளார்ந்த நுகர்வு ஆற்றலை வெளிப்படுத்தியது. மேலும், சீனச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்வதற்குரிய மாபெரும் ஊக்குவிப்பையும் இது அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
