ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த HRNA அமைப்பின் தரவுகளின்படி, இதுவரை 490 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்பு படை வீரர்கள் என மொத்தம் 538 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 10,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானிய ரியால் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் பணவீக்கத்தால் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது நாடு தழுவிய கிளர்ச்சியாக மாறியுள்ளது.
இதனை ஒடுக்க ஈரான் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், இந்த வன்முறைக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என தெஹ்ரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது
