தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:- “அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கோவில் மட்டுமல்ல தனியார் கோவில்கள், மண்டபங்கள் எதிலும் பார்க்க விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளின் வாட்ஸ்அப்-க்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
மேலும் தனியார் இடங்களில் கூட இந்த பகுதியில் சிறுபான்மையினர் வசிப்பதால் அனுமதிக்க முடியாது என்று தடை செய்துள்ளார்கள். இதுபற்றி உரிய ஆதாரங்களுடன் சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் முறையிட்டோம். சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக ஏற்று விசாரித்து தீர்ப்பு வழங்கியது.
எந்த இடத்திலும் நேரலை செய்யவோ, பஜனை, வழிபாடுகள், அன்னதானம் போன்ற நிகழ்ச்சியோ நடத்த தடையில்லை என்று அறிவித்து உள்ளது. தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்து உள்ளது” என்றார்.