முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS), தான் தலைமையேற்று நடத்தி வந்த அமைப்பை ஒரு அரசியல் கட்சியாக அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி மூன்று ஆண்டுகளாக அவர் வழிநடத்தி வந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை (ADMKTUMK), தற்போது ஒரு அரசியல் கட்சியாக அறிவித்துள்ளார்.
உதயமான இந்த புதிய கட்சியின் பெயர், அவரது குழுவின் பெயரை அடிப்படையாக கொண்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் புதிய கட்சியை தொடங்கினார்; டிச.15-ல் முக்கிய ஆலோசனை கூட்டம்
