2025 சீனா—ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்புக் கருத்தரங்கு மே 29ஆம் நாள் தியன்ஜின் மாநகரில் நடைபெற்றது. இதில் சீனா—ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு ஒத்துழைப்பு மையத்தின் கட்டுமானத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் அதிகாரி ஹுவாங்லூ, உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் துறை சார்ந்த தொழில் நுட்பப் பொதுப் பொருட்களை வழங்க சீனா ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் இணைந்து இத்துறை சார்ந்த ஒத்துழைப்புகளை ஆழமாக்க விரும்புகின்றது என்று தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் துணைத் தலைமைச் செயலாளர் ஓலிக் கொபெலோபு கூறுகையில், செயற்கை நுண்ணறிவுத் துறை சார்ந்த ஒத்துழைப்பானது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மிக முக்கியமான மிக வேகமாக வளரும் துறைகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.