திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

Estimated read time 0 min read

விடுமுறை நாளையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள், 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். விடுமுறை நாளையொட்டி பக்தர்களின் வருகை வழக்கத்தை விடவும் அதிகரித்து காணப்பட்டது.

பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்களுக்களுக்கான சிறப்பு தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் கூட்டம் அலைமோதியதால், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சுபமுகூர்த்த நாளையொட்டி கோயில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

You May Also Like

More From Author