சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு..! 10 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி..!

Estimated read time 1 min read

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(செப்.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

புரட்டாசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 21-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

இதனிடையே சபரிமலை, பம்பையில் வருகிற 20-ந் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர் சங்கமம் நடத்தப்படுகிறது.

இந்த சங்கமத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 3 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். மாத பூஜையின் போது, பக்தர்களுக்கு எந்தவித இடையூறுமின்றி பக்தர் சங்க மத்தை நடத்த கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

வழக்கமாக, மாதபூஜை நாட்களில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 50 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் தற்போது 19, 20 ஆகிய தேதிகளில் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளித்து இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You May Also Like

More From Author