தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்க்கு விசிக ஆதரவுக் கடிதம் வழங்கினாலும், ஆளுநர் உடனடியாக விஜயை முதல்வராக்கவும், ஆட்சி அமைக்கவும் ஒப்புதல் அளிக்க மாட்டார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இதற்கு காரணம் டிடிவி தினகரன் எழுப்பிய (forgery) மோசடி குற்றச்சாட்டு தான்.
ஆதரவுக் கடிதங்களில் மோசடி (forgery) நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளதால், ஆளுநர் உடனடியாக விஜயை ஆட்சி அமைக்க அழைக்க மாட்டார் என்று தெரிகிறது.கடிதங்களின் உண்மைத்தன்மையை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சரிபார்ப்பு செயல்முறை சில காலம் எடுக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இரவு 7 மணிக்கு ஆளுநர் கேரளா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் இன்று இரவு 7:10 மணிக்கு கேரளா செல்கிறார். கேரளாவிலும் புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில் பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பயணம் ஆட்சி அமைப்பு தொடர்பான முடிவுகளில் கூடுதல் தாமதத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் தவெகவின் ஆட்சி அமைப்பு முயற்சி இன்னும் சில நாட்கள் நீண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது.
