மனித உருவ ரோபோக்களுக்கான 2ஆவது உலக விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தியேன்சோ அணியைச் சேர்ந்த ரோபோ சனிக்கிழமை 9’39 வினாடிகளில் 100 மீட்டர் ஓடி முதலிடம் பெற்றுள்ளது.

இது புகழ்பெற்ற ஜமைக்கன் வீரர் மின்னல் போல்ட் நிலைநிறுத்திய 9’58 வினாடிகள் என்ற ஆண்களுக்கான 100 மீட்டர் உலகச் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6 கண்டங்களிலிருந்து வந்த 666 அணிகளின் 2056 மனித உருவ ரோபோக்கள் நடப்பு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளன. ரோபோக்களின் எண்ணிக்கை கடந்த போட்டியுடன் ஒப்பிடுகையில் 4 மடங்காகு அதிகமாகும். நடப்புப் போட்டியில் 51 நிகழ்ச்சிகளுடன் மொத்தம் 1301 போட்டி நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தடகளம், கால்பந்து ஆகியவற்றைத் தவிர, பளுதூக்குதல்,கயிறு இழுத்தல், மேசை பந்து முதலிய போட்டிகளும் இடம்பெறும். இவை ரோபோக்களின் மைய கட்டமைப்பு மற்றும் உதிரி பாகங்களின் செயல்திறன்களின் மீது தீவிர சோதனை மேற்கொள்ளும்.
மேலும் மனிதர்களின் வாழ்க்கையில் ரோபோக்களின் இணைப்பை ஊக்குவிக்கும் வகையில், தொழிற்துறை, ஹோட்டல்கள், வீடுகள் மற்றும் பொருள் பெயர்ச்சி உள்ளிட்ட பயன்பாட்டுக் காட்சிகள் நடப்புப் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன.
