சீனாவில் 2026ஆம் ஆண்டின் வசந்த விழா காலத்தில், வெளியான திரைப்படங்களின் மொத்த வசூல் 400 கோடி யுவானைத் தாண்டியுள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 12ஆம் நாள், சீனத் தேசிய திரைப்படப் பணியகம் உள்ளிட்டவை 2026ஆம் ஆண்டில் திரைப்படப் பொருளாதாரத்தை விரைவுபடுத்துவது எனும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. ஆண்டு முழுவதிலும் பொது மக்கள் திரைப்படங்களை ரசிப்பதற்காக 120 கோடி யுவானுக்கு மேல் நிதி உதவி அளிக்கப்படுகிறது. தவிரவும், சீனத் தேசிய திரைப்படப் பணியகமும், சீன ஊடக குழுமும் இணைந்து வெளிநாடுகளில் சீனாவில் பயணம் மேற்கொள்வது என்ற தலைப்பில் சி.எம்.ஜியின் ஆயிரக்கணக்கான திரைப்பட பேனர்கள் வைத்து 2026 வசந்த விழா திரைப்படத்திற்கான சிறப்பு விளம்பர நடவடிக்கைகளை மேற்கொண்டன. உலகளாவிய ரசிகர்களுக்கு தனிச்சிறப்பு வாய்ந்த திரைப்படங்களின் ஈர்ப்பு மற்றும் அதிகமான சுற்றுலா மூலவளங்கள் இத்தகைய நடவடிக்கையின் மூலம் வெளிகாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
