எஸ்.சி.ஓ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 25ஆவது கூட்டத்துக்கு ஷிச்சின்பிங் தலைமை ஏற்பு

Estimated read time 0 min read

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 25ஆவது கூட்டம் செப்டம்பர் முதல் நாள் காலை தியென்ஜின் மாநகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், தற்போது 26 நாடுகளின் பங்கேற்பு, 50க்கும் அதிகமான துறைகளிலுள்ள ஒத்துழைப்பு மற்றும் 30லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார மதிப்பைக் கொண்ட உலகின் மிகப் பெரிய பிராந்திய அமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாறியுள்ளது. இந்த அமைப்புக்கு நாளுக்கு நாள் சர்வதேச செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்றார்.

திறப்பு மற்றும் பொறுமையில் ஊன்றி நிற்க வேண்டும். ஆசிய மற்றும் ஐரோப்பிய கண்டங்களில், பழமையான பண்பாடுகள் உருவாகின. கிழக்கு மற்றும் மேற்கு பரிமாற்றம், மனித குலத்தின் முன்னேற்றங்கள் ஆகியவை இங்கு நடைபெற்று வருகின்றன.

இங்குள்ள மக்கள், பழங்காலம் தொட்டு, ஒருவரிடம் இருப்பதை மற்றவரின் தேவைக்குப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள், மானிட பரிமாற்றத்தில் தொடர்பை அதிகரித்து, பொருளாதார ஒத்துழைப்பில் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, கைகோர்த்துக்கொண்டு, தன்னை உயர்த்துவதோடு பிறருக்கும் உதவியளித்து.

வேற்றுமையில் ஒற்றுமைக்கான அழகைப் பகிர்ந்து, இணக்கம் கொண்டு வாழும் பல்வேறு நாகரிகங்களின் பூங்காவை உருவாக்க வேண்டும் ஷிச்சின்பிங் என்று தெரிவித்தார்.

மேலும், எல்லைப் பிரதேசத்தில் இராணுவத் துறை நம்பிக்கையை ஏற்படுத்தி, நட்பு, கூட்டு நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்புப் பாலமாக எல்லை பிரதேசம் உருவாக்கப்பட்டுள்ளது.ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பின் மூலம், பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கு உந்து ஆற்றல் கொண்டு வரப்பட்டது.

நீண்டகால சுமூகமான அண்டை நாட்டுறவு என்ற வெளியுறவுக் கொள்கையை உருவாக்கினோம். கூட்டு ஆலோசனை, கூட்டு கட்டுமானம் மற்றும் கூட்டு பகிர்வு வாய்ந்த உலக மேலாண்மை கண்ணோட்டத்தை வழங்கி, பல தரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என்றார்.

பயனுள்ள மற்றும் உயர் தர திறனில் ஊன்றி நிற்க வேண்டும் என்று கூறிய அவர், உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலும் வலுவான ஆதரவளிக்குமாறு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி வங்கியைக் கூடிய விரைவில் கட்டியமைக்க வேண்டும் என்றும் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author