3வது சீன-அமெரிக்க டிராக் 1.5 உரையாடல் 25ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. அதற்கு முன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவருமான வாங் ஹூநிங், அமெரிக்க பிரதிநிதிகளை 24ம் நாள் சந்தித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், அமெரிக்காவுடன் இணைந்து பாடுபட்டு, இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களைச் சரியாகச் செயல்படுத்தி, பரஸ்பர புரிந்துணர்வை அதிகரித்து, தத்தமது மைய நலன்களுக்கு மதிப்பளித்து, நிலையான சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு உறவை உருவாக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
இரு நாட்டுத் தலைவர்களின் சீரான உறவு, அமெரிக்க-சீன உறவிலுள்ள மிக மதிப்புள்ள மற்றும் முக்கிய பகுதியாகும். இரு தரப்பும், தொழில் நிறுவனங்களிடையிலான ஒத்துழைப்பை முன்னெடுத்து, மனிதத் தொடர்பு மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொடர்பான அபாயங்களைத் தடுக்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
