அஜர்பைஜான் மற்றும் கசகஸ்தான் தலைவர்களுடன் சாவ் லேஜீ சந்திப்பு

Estimated read time 1 min read

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவில் பயணம் மேற்கொண்டிருந்த அஜர்பைஜான் தேசியப் பேரவையின் தலைவர் கஃபரோவா அம்மையார், கசகஸ்தானின் முதல் துணைத் தலைமையமைச்சர் ரோமன் ஸ்க்லியார் ஆகியோரை சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர் சாவ் லேஜீ மார்ச் 25ஆம் நாள் முற்பகல் ஹாய்நான் மாநிலத்தில் தனித்தனியாக சந்தித்து பேசினார். அதேநாள் பிற்பகல், போ ஆவ்  ஆசிய மன்றத்தின் ஆளுநர் மற்றும் உயர்நிலை ஆலோசகருடன் அவர்கள் கூட்டாகச் சந்திப்பு நடத்தினர்.

அப்போது சாவ் லேஜீ கூறுகையில், பல்வேறு நாடுகளுடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த உலக ஆட்சிமுறை முன்மொழிவைக் கூட்டாகச் செயல்படுத்தி, மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது எனக் குறிப்பிட்டதோடு, போ ஆவ் ஆசிய மன்றத்தின் வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author