டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

Estimated read time 1 min read

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நாளை காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹெல்தர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழை மற்றும் தற்போதைய வானிலை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ள நீரின் அளவு, பற்றாக்குறை நீர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த கூட்டங்களில் காவிரி ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author