சீனாவின் நகரப்புற வளர்ச்சிக்கு ஐ.நா மனித குடியிருப்புத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் பாராட்டு

Estimated read time 1 min read

 

சீனா 80 கோடி மக்களை வறிய நிலையிலிருந்து வெற்றிகரமாக விடுவித்துள்ளதோடு, தற்போது நகரமயமாக்கல் பணிகளை நிறைவேற்றி வருகிறது. இத்தகைய அனுபவம், நகரமயமாதலிலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் கற்று கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித குடியிருப்புத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் ரோஸ்பாக் அம்மையார் சுட்டிக்காட்டினார். சமீபத்தில் சீன ஊடகக் குழுமத்திற்கு சிறப்பு நேர்காணலை அளித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரோஸ்மாக் மேலும் கூறுகையில் வரும் 25ஆம் ஆண்டுகளில், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் கண்டங்களில் சுமார் 80 கோடி மக்கள் நகரப்புறங்களுக்கு குடியேறி வருவதாகவும், பல ஆசிய நாடுகள் இன்னும் வறிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

வறுமை ஒழிப்புக்கு நகரங்களின் முக்கியத்துவம் மேலும் தெளிவானது. நகரப்புறங்களில் மக்களுக்கு குடியிருப்பு வசதி அளிக்கப்படுவது மட்டுமல்லாமல், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, மருத்துவ சேவை மற்றும் ஆரோக்கியம் பராமரிப்பு ஆகியவை கிடைக்க வேண்டும். நகரப்புறங்களில், மக்களுக்கு பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை பெறுவது மட்டுமல்லால், பொது இடங்கள் மற்றும் பசுமை நிலங்களைப் பயன்படுத்தவும் முடியும். அதாவது, மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே இணக்கமாக வாழ்வது என்ற இலக்கை நனவாக்க வேண்டும் என்று ரோஸ்பாக் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில் சீனப் பயணம் குறித்து பேசுகையில்,  சீனாவின் நுண்னறிவு வாழ்க்கைத் துறை விரைவாக வளர்ந்து வருகிறது. ஸ்மார்ட் வீடுகளின் முன்னோடித் திட்டத்தில் நுண்ணறிவுத் திறன் வியப்பு அளிப்பதாக உள்ளது. இது எனது மனதில் ஆழமாக பதிவாகியுள்ளது என்று ரோஸ்பாக் கூறினார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author