ஜம்மு-காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் சுற்றுலா தலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10:12 மணியளவில் சக்திவாய்ந்த பனிச்சரிவு ஏற்பட்டது.
மலையிலிருந்து சரிந்து வந்த பிரம்மாண்ட பனிச் சுவர் அங்குள்ள கட்டிடங்களை மூழ்கடித்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த பனிச்சரிவின் வேகம் அதிகமாக இருந்தபோதிலும், நல்வாய்ப்பாக இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அவசரக்கால மீட்புக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
