ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3ஆம் நாள் வரை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிஷ்கெகில் நடைபெறும் 2026ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 26ஆம் நாள் தெரிவித்தார். மேலும், கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ஜபரோவ், எகிப்து அரசுத் தலைவர் சிசி ஆகியோரின் அழைப்பின் பேரில், ஷிச்சின்பிங் இரு நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
