சீனாவின் சரக்கு போக்குவரத்தின் மொத்த தொகை அதிகரிப்பு

Estimated read time 0 min read

சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் செப்டம்பர் 29ஆம் நாள், இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில் சரக்கு போக்குவரத்து பற்றிய தரவுகளை வெளியிட்டது. புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், சீனாவின் சரக்கு போக்குவரத்து நிதானமான நிலையில் உள்ளதோடு, வளர்ச்சியடைந்துள்ளது. சரக்கு போக்குவரத்து சந்தையின் அளவு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சேவையின் சர்வதேச சரக்கு போக்குவரத்து வழிகள் அதிகரிக்கப்பட்டதுடன் தரமும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், முதல் 8 மாதங்களில், நாட்டின் பொது சரக்கு போக்குவரத்தின் மொத்த தொகை 2 கோடியே 43 லட்சத்து 60 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.9 விழுக்காடு அதிகமாகும். பொது சரக்கு போக்குவரத்தின் மொத்த தொகையின் நிதானமான அதிகரிப்பும், கட்டமைப்பு மேம்பாடும் ஒரே நேரத்தில் முன்னேற்றப்பட்டு வருகின்றன. அத்துடன், தொழில் மற்றும் விநியோக சங்கிலியின் மீள்தன்மை மேலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author