நேபாளத்தில் ஆக்ஸ்ட் 26ஆம் நாள் காலை 10:30 மணியளவில் ஏற்பட்ட மண் சரிவு சீனாவின் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள ஜிர்லுங் வட்டத்தையும் பாதித்துள்ளதோடு உயிர் இழப்பை ஏற்படுத்திள்ளது. மாயமான மக்களை மீட்டு, உள்ளூர் மக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் என்றும், காயமுற்றவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்து, இயன்றளவில் உயிர் இழப்பைத் தடுக்க வேண்டும் என்றும் சீன அரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையில், கண்காணிப்பையும் முன்னெச்சரிக்கையையும் வலுப்படுத்தி, அறிவியல் ரீதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தொடர் பேரழிவு நிகழ்வதைத் தடுக்கப் பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அங்குள்ள மீட்புதவி மற்றும் புனரமைப்புப் பணிக்கு ஏற்பாடு செய்யும் வகையில் அரசவைத் துணைத் தலைமை அமைச்சர் சாங் கோட்சிங் தலைமையிட்ட பணிக் குழு ஒன்று சிட்சாங்கிற்கு விரைந்து சென்றுள்ளது.
