வெறும் 60 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் சுமார் 4,780 கோடி ரூபாய் வசூலித்து ஹாலிவுட் திரையுலகில் ‘அப்செஷன்’ திரைப்படம் மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி அசாத்திய வசூல் சாதனையை எட்டியுள்ள இந்தப் படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இயக்குநர் கறி பார்கர் இயக்கத்தில் இண்டி நவரெட்டே, மைக்கேல் ஜான்ஸ்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் கடந்த மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதலே உலகளாவிய ரசிகர்களிடம் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டை நடத்தியது.
சுமார் 1 மில்லியன் டாலருக்கும் குறைவான பட்ஜெட்டில், அதாவது இந்திய மதிப்பில் 60 கோடி ரூபாயில் உருவான இந்தப் படம், இதுவரை 4,780 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம் தான் செய்யப்பட்ட முதலீட்டை விட சுமார் 79 மடங்கு அதிகமான லாபத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
இதற்கு முன்பு குறைந்த செலவில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த ‘எலிமென்டல்’ போன்ற திரைப்படங்களின் சாதனையை ‘அப்செஷன்’ முறியடித்துள்ளது. இதன் மூலம் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் குவித்த படங்களின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளது.
‘அப்செஷன்’ படத்தின் இந்த பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் கறி பார்கருக்கு ஹாலிவுட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், அவர் அடுத்ததாக ‘எனிதிங் பட் கோஸ்ட்ஸ்’ என்ற புதிய படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
