உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவு மற்றும் ஐ.நா நிறுவப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, உலக இளைஞர் அமைதி மாநாடு ஜூலை 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. உலகின் 130க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகள், சீனாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் சீனாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட சுமார் 3000பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அமைதிக்காக ஒன்றிணைப்பது என்பது நடப்பு மாநாட்டின் தலைப்பாகும். இம்மாநாட்டில் பல்வேறு கருப்பொருளில் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க, உலக இளைஞர்களின் அமைதி முன்மொழிவு வெளியிடப்படும்.