மலேசிய செய்தித்தாளில் ஷி ச்சின்பிங் சிறப்பு கட்டுரை வெளியீடு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மலேசியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, அவர் எழுதிய சிறப்பு கட்டுரை, “சீன-மலேசியா நட்புறவு மேலும் இனிமையான எதிர்காலத்துக்கு முன்னேற செய்வோம்” என்ற தலைப்பில், மலேசியாவின் சின் சியூ டெய்லி, தி ஸ்டார், சினார் ஹரியான் ஆகிய ஊடகங்களில் ஏப்ரல் 15ஆம் நாள் வெளியிடப்பட்டது.

இக்கட்டுரையில் ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும் மலேசியாவும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகும். கடல்வழி பட்டுப்பாதை, இரு நாடுகளுக்கிடையிலான ஆயிரம் ஆண்டுகள் வரலாறுடைய நட்பார்ந்த பரிமாற்றத்தைச் சாட்சியுரைத்துள்ளது என்றார். மேலும், சீனாவும் மலேசியாவும் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, உயர்நிலை நெடுநோக்கு ஒத்துழைப்பின் மூலம் இரு தரப்புறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும், தொழில் சங்கிலி மற்றும் வினியோக சங்கிலியின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, எண்ணியல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம், நீல நிற பொருளாதாரம், சுற்றுலா பொருளாதாரம் ஆகியவற்றின் ஒத்துழைப்புகளை முக்கியமாக முன்னேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தவிரவும், மலேசியா உள்ளிட்ட ஆசியான் நாடுகளுடன் இணைந்து, அமைதி வளர்ச்சி என்ற வரலாற்று ஓட்டத்தைப் பின்பற்றி, நெருங்கிய சீன-ஆசியான் பொது எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாக உருவாக்க சீனா விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author