பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) பொதுமக்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகளுக்காக விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (எஸ்பிஎஸ்) பணியின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த தலைமையகத்தின் கீழ் பாதுகாப்பு விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தால் கையாளப்படுகிறது.
இந்த ஒப்புதல் குறித்து மத்திய அரசு மௌனம் சாதித்தாலும், சிசிஎஸ் அனுமதித்துள்ள திட்டத்தில் குறைந்தபட்சம் 52 செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதையில் மற்றும் புவிசார் சுற்றுப்பாதையில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த திட்டத்தில் ரூ. 26,968 கோடி செலவில், 21 செயற்கைக்கோள்களை இஸ்ரோவும், மீதமுள்ள 31 செயற்கைக்கோள்களை தனியார் நிறுவனங்களும் உருவாக்கி விண்ணில் செலுத்த உள்ளன.
ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல்
