செப் 1-ல் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்

Estimated read time 1 min read

மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாட்களுக்கு சம்பா பட்டம் & குடிநீர் தேவைக்காக நீர்திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாட்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரிப் படுகையில் போதிய மழைப்பொழிவு கிடைக்காத நிலையிலும், தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றும், சேலம் மாவட்டம். மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாட்களுக்கு. அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், 01.09.2026 அன்று, மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்க உள்ளார்கள். 2026-2027 பாசன ஆண்டின் தொடக்கத்தில் மேட்டூர் அணையில் பயன்பாட்டிற்குரிய நீர் இருப்பு 41.223 டி.எம்.சி. மட்டுமே இருந்தது. கர்நாடக அணைகளிலிருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப்பான 10 டி.எம்.சி.யை பராமரிக்க வேண்டியிருந்ததாலும், டெல்டா பாசனத்திற்குத் தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர்த் தேவைகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தேவையான அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author