நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

Estimated read time 0 min read

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் பிரதமர் பாலேந்திர ஷாவுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நிலைமை குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த இக்கட்டான காலகட்டத்தில் நேபாள சகோதர சகோதரிகளுடன் இந்திய மக்கள் உறுதுணையாக நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நேபாளத்திற்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க தயார் என்றும், ஏற்கனவே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்திய குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author