இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகி ஆற்றில் விழுந்ததே வெள்ளப்பெருக்குக்கு காரணம்- நேபாள அரசு

Estimated read time 1 min read

இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகி லெண்டே ஆற்றில் விழுந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

நேபாள எல்லையை ஒட்டிய திபெத் நகர் ஒன்றில் ‘சேற்றுச்சரிவு’ ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு சீன அதிபர் உத்தரவிட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிபர் வலியுறுத்தியுள்ளார். இந்த சூழலில் இன்று காலை நேபாளத்தின் வடக்குப் பகுதி கடுமையான திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகி

லெண்டே ஆற்றில் விழுந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. நேபாளம்-சீனா இடையிலான ரசுவாகதி எல்லையின் வடகிழக்கே 20 கி.மீ. தொலைவில் பனிப்பாறை சரிந்து லெண்டே ஆற்றில் விழுந்ததாகவும், திபெத் பகுதியில் இன்று (26.08.2026) காலை ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவுக்கோலாக பதிவான நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு, பாறைகள் சரிவால் ஆற்றுப்பாதை அடைப்பெற்று அணை உடைப்பெடுத்து பெருவெள்ளமாக மாறியுள்ளதாகவும் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சிசர் கனால் கூறியுள்ளார்.

பெருவெள்ளத்தில் பலியானவர்களின் 55 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 400 பேர் வரை மாயமாகியிருப்பதாகவும் நேபாள அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

You May Also Like

More From Author