சீனாவின் சேவை வர்த்தக வளர்ச்சி, சேவை வர்த்தகத்திற்கான 2026ஆம் ஆண்டு சீனச் சர்வதேச கண்காட்சிக்கான ஆயத்தப் பணிகள் ஆகியவை குறித்து 28ஆம் நாள் சீன அரசவை தகவல் அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
நடப்புக் கண்காட்சி திறந்த தளத்தின் பங்கை மேலும் பயன்படுத்தி, சீனா சேவை என்ற கண்காட்சி அரங்கை முதன்முறையாக அமைத்து, பல்வேறு இடங்களிலும் உள்ள சேவை வர்த்தகத் துறையின் புத்தாக்கச் சாதனைகள் மற்றும் முன்மாதிரிகளைக் காட்சிப்படுத்தவுள்ளது. மேலும், சேவை வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் வசதிமயமாக்கலை விவாதிக்கவும் முன்னெடுக்கவும் அனைத்து நாடுகளுக்கும் உதவும் வகையில், சீனச் சேவை வர்த்தக வளர்ச்சி அறிக்கை உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியிடப்படும். சுமார் 100 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
