6 அமைச்சர்களின் பதவியை பறிக்கப்போகும் முதல்வர் விஜய்?

Estimated read time 0 min read

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 4 முதல் 6 அமைச்சர்களின் பதவிகளைப் பறிக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ள நிலையில், அவர்களுக்குப் பதிலாகப் புதிதாகப் பொறுப்பேற்க உள்ளவர்களின் உத்தேசப் பட்டியலும் தற்போது தயாராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பதவியில் இருந்து விடுவிக்கப்பட உள்ள அமைச்சர்கள் யார், புதிதாக யாரெல்லாம் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளனர் என்பது குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு அமைச்சரவை மாற்றம் தொடர்பான முடிவுகள் வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

You May Also Like

More From Author