கியிரோங்கில் மண் அரிப்புக்கான காரணம் பற்றிய நிபுணர்களின் ஆய்வு

Estimated read time 0 min read

சீன இயற்கை வளங்கள் அமைச்சகம் ஆகஸ்டு 27ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, நேபாளத்திலுள்ள உயரமான பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு, மண் அரிப்பை ஏற்படுத்தி, தென்மேற்குச் சீனாவின் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் கியிரோங் நுழைவாயிலைத் தாக்கியது தெரியவந்துள்ளது.

இயற்கை வளங்களுக்கான சீன வான் புவி இயற்பியல் ஆய்வு மற்றும் தொலை உணர்தல் மையத்தின் மூத்த பொறியாளர் குவோ ஸாவ்ச்செங் கூறுகையில், உயர் தெளிவுத்திறன் கொண்ட தொலை உணர்தல் படங்கள் மற்றும் நிபுணர்களின் ஆய்வின்படி, நேபாளத்தில் உள்ள டோங்லின் சாங்போ ஆற்றின் கிளை நதியான ஸுவோஜியானின் உயரமான மேற்பகுதியில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டது என்றார்.

மேலும், தற்போது கியிரோங்கில் மழை தொடர்ச்சியாகப் பெய்துள்ளதால், தேடுதல் மற்றும் மீட்புதவிப் பணியாளர்கள் மேற்பகுதியிலிருந்து வரும் வெள்ளப்பெருக்கைக் கவனிக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

More From Author