மக்காவின் நிர்வாக, சட்டமன்ற மற்றும் நீதித்துறை வாரியங்களின் புதிய தலைவர்களுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

20ஆம் தேதி காலை மக்காவில், மக்காவ் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகிய வாரியங்களின் புதிய தலைவர்களை சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் சந்தித்தார்.


இச்சந்திப்பின் போது ஷி ச்சின்பிங் அனைவருக்கும் நான்கு கோரிக்கைகளை முன்வைத்தார்:

ஒட்டுமொத்த கருத்தை நிறுவ வேண்டும், பணி மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்த வேண்டும், ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும், பணிபுரிவதில் நேர்மையை பேணிக்காக்க வேண்டும் என்றார்.


அனைவரும் கடமைகளை மனதில் வைத்து, கடினமாக பணி புரிந்து, நாட்டிற்கும் மக்காவுக்கும் பொறுப்பாக பணியாற்ற வேண்டும் என்றும், மேலும் நாட்டிற்கும், மக்காவுக்கும், உங்களுக்கும் பொறுப்பு ஏற்கும் தலைசிறந்த சாதனைகளை எட்ட வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author