அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என்க்கு சிறப்பு பேட்டி அளித்தார். 2035 ஆம் ஆண்டுக்குள் சீனாவின் முழு பொருளாதார அளவிலான நிகர பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் உச்சத்திலிருந்து 7முதல்10 விழுக்காடு வரை குறைக்கப்படும் என்றும், சீனா மேலும் சிறப்பாகச் செயல்பட பாடுபடும் என்றும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இவ்வாண்டின் செப்டம்பர் தெரிவித்தார். இது குறித்து இங்கேர் ஆண்டர்சென் கூறுகையில், இந்த இலக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் சீனா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார்.
சீனா ஆண்டுதோறும் 200 முதல் 300 வரையிலான ஜிகாவாட் புதிய காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திறனை மின்கட்டமைப்பில் அதிகரித்து வருகிறது. இது ஒரு அற்புதமான அளவு திறன். சீனா இன்னும் அதிக அளவு நிலக்கரியைப் பயன்படுத்தி வருகின்றது. அது உண்மை தான். இருப்பினும், சீனா தனது மொத்த உற்பத்தித் திறனில் 60% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இருக்க வேண்டும் என்ற இலக்கை நனவாக்க பாடுபடுகிறது. மேலும் அது உண்மையான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
உண்மையில், சீனாவின் சாதனை எதிர்பார்ப்புகளை தாண்டியுள்ளது. சீனாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் உற்பத்தி அளவு விரைவான அதிகரிப்பைக் கண்டுள்ளோம் என்றும் இங்கேர் ஆண்டர்சென் தெரிவித்தார்.
