“உலகளாவிய நெருக்கடி மத்தியிலும் சாதனை”- GDP வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி

Estimated read time 1 min read

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா பதிவு செய்துள்ள 7.8% எனும் சிறப்பான ஜிடிபி (GDP) வளர்ச்சி ஒரு மகத்தான சாதனை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா பதிவு செய்துள்ள 7.8% எனும் சிறப்பான ஜிடிபி (GDP) வளர்ச்சி ஒரு மகத்தான சாதனையாகும். உலகளாவிய நிச்சயமற்ற சூழலில், கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிச் சிக்கல்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் மக்கள் சக்தியின் ஒருங்கிணைந்த வலிமையே இத்தகைய வளர்ச்சியைச் சாத்தியமாக்கியது. எதிர்மறைக் கணிப்புகளைச் சொன்னவர்களின் கணிப்புகள் பொய்யாயின. இந்தியா மீண்டும் ஒருமுறை சிறப்பான வளர்ச்சியை எட்டி மலர்ந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author