கிர்கிஸ்தான் அரசுத் தலைவருடன் ஷி ச்சின்பிங் பேச்சுவார்த்தை

Estimated read time 1 min read

கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ஜபரோவ், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடன், உள்ளூர் நேரப்படி ஆகஸ்டு 31ஆம் நாள் முற்பகல் பிஷ்கெக் நகரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, நமது கூட்டு வழிகாட்டலுடன், சீன-கிர்கிஸ்தான் உறவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு துறைகளில் மேற்கொண்ட ஒத்துழைப்புகள், இரு நாட்டு வளர்ச்சிக்குத் துணைப் புரிந்ததோடு, பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையையும் முன்னேற்றியுள்ளன என்றார். கிர்கிஸ்தானுடன் இணைந்து, வளர்ச்சி நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி, நாட்டின் ஆட்சிமுறை பற்றிய அனுபவங்களின் பரிமாற்றத்தை ஆழமாக்கி, மேலதிக பயனுள்ள ஒத்துழைப்புச் சாதனைகளை உருவாக்கி, சீன-கிர்கிஸ்தான் பொது எதிர்காலச் சமூக கட்டுமானத்தை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஒன்றுக்கொன்று உயர்நிலை அரசியல் நம்பிக்கை மற்றும் உறுதியான ஆதரவானது, சீன-கிர்கிஸ்தான் உறவின் சீரான வளர்ச்சிக்கான முக்கிய உத்தரவாதமாகும். கிர்கிஸ்தானுடன், தத்தமது மைய நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் தொடர்ந்து ஒன்றுக்கொன்று உறுதியுடன் ஆதரவு அளிக்கவும், ஐ.நாவின் கட்டுக்கோப்புக்குள் இசைவாகச் செயல்பட்டு, நான்கு உலக முன்மொழிவுகளைக் கூட்டாக செயல்படுத்தவும் சீனா விரும்புவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

ஜபரோவ் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, கிர்கிஸ்தான்-சீன புதிய யுக பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் உயர்வேக வளர்ச்சியுடன், இரு நாட்டுறவு பொற்காலத்தில் நுழைந்துள்ளது என்றார். மேலும், ஒரே சீனா என்ற கோட்பாட்டை கிர்கிஸ்தான் உறுதியுடன் பின்பற்றி, ஒன்றுக்கொன்று மதிப்பு, சமத்துவம் மற்றும் பரஸ்பர நலன் ஆகிய அடிப்படைகளில் சீனாவுடன் நட்புறவை வளர்க்க கிர்கிஸ்தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இப்பயணத்தின்போது, தொழில் நுட்பம், கல்வி, மானுடவியல், ஊடகங்கள் உள்ளிட்ட துறைகள் பற்றிய 20க்கும் மேலான ஒத்துழைப்பு ஆவணங்களில் இரு தரப்பினரும் கையொப்பமிட்டனர்.

You May Also Like

More From Author