பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

Estimated read time 0 min read

கிர்கிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடியை ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக கிர்கிஸ்தான் சென்றுள்ளார். இந்நிலையில், மாநாட்டிற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியும், ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானும் நேரில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மேற்காசியாவில் நிலவும் சூழ்நிலை மற்றும் வர்த்தக பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பிராந்தியத்தில் அமைதி முயற்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளின் அவசியம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார். மேலும், அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் ஈரான் அதிபரிடம் பிரதமர் மீண்டும் வலியுறுத்தியதாக தெரிகிறது.

You May Also Like

More From Author